கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்ட குண்டலப் பேட்டை நகரில் இருந்து 10 கி.மீ., தூரத்திலும், மைசூரிலிருந்து 60 கி.மீ., தூரத்திலும் மேற்குத் தொடர்ச்சி மலையின் எழில் சூழ்ந்த மலையிலே வேணு கோபால சுவாமி கோயில் அமைந்துள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கோயிலுக்குச் செல்ல வாகன அனுமதி உண்டு. மூலவர் வேணு கோபால சுவாமி கர்ப குடியிலே குடி கொண்டுள்ளார். கோபால சுவாமி மலை ஆண்டு முழுவதும் பனி சூழ்ந்து காணப்படுவது இதன் சிறப்பு. சுவர்களிலே உட்பிரகாரம் கை தொட்டால் பனி கையிலே பிடிக்கலாம்-கர்ப குடியிலும்,நான்கு சுவரிலும், மேல் கூரையும் பனி கொட்டுகிறது. அர்ச்சகர் கையாலே சுவரைத் தொட்டு பனி நீரை நம் மீது தெளிப்பார். அது தான் பிரசாதம். மைசூர் மாகாணத்தை ஆண்ட மன்னர்கள் இக்கோயிலைக் கட்டியதாக சொல்கின்றனர். சுமார் 700 வருடங்களாக ஆண்டு தோறும் பங்குனி மாதம் ஏழு நாட்கள் விழா எடுத்துத் தேரோட்டம் நடத்துகின்றனர். இங்குள்ள பெருமாளை வேண்டினால் கல்யாணம், குழந்தை பாக்கியம் உண்டாகும். இது பெரிய புண்ணிய ஸ்தலமாகவும். சிறந்த சுற்றுலாபகுதியாகவும் உள்ளது. மலையிலே 77 சிறிய ஏரிகளும், அம்ச தீர்த்த ஏரியிலே மனம் கவரும் அன்னப் பறவைகளும் உள்ளன.