திருத்தங்கல் கருநெல்லி நாதர் சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22அக் 2025 04:10
சிவகாசி; திருத்தங்கல் அருள்மிகு மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லி நாத சுவாமி திருக்கோயில் பழனியாண்டவர் சன்னதியில் கந்த சஷ்டி திருக்கல்யாண விழா காப்புக் கட்டி கொடியேற்றத்துடன் துவங்கியது. காலையில் சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இரவு 7:00 மணி அளவில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சன்னதி ரத வீதியில் தங்கரத பவனி வந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் சுவாமிகள் தினமும் இரவு 7:00 மணிக்கு தங்க ரதத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் புரிவார். அக். 28 ல் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.