பதிவு செய்த நாள்
28
டிச
2012
12:12
பீகார் ஷரீபிலிருந்து 25 கி.மீ தொலைவில் ஷேக்புரா ஜில்லாவில் உள்ளது பாராபிகா டவுன். ஒரு காலத்தில் மக்கள் இங்கு 12 பிகா(மூன்று ஹெக்டேர்) பரப்பளவு நிலத்தில் குடியேறி வசித்ததால் அக்காரணப் பெயர் பெற்றது. இங்கிருந்து ஐந்து கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது சமாஸ் கிராமம். கருமை நிற கிரானைட் கல்லால் உருவாக்கப்பட்டுள்ள இச்சிலை ஏழரை அடி உயரமும், மூன்றரை அடி அகலமும் கொண்டதாக நான்கு கிரங்களிலும் விஷ்ணுவுக்கு உரிய அடையாளங்களான சங்கு, சக்கரம், கதை, தாமரைப் பூவுடன் வலது கையின் கீழ்ப்புறம் ஒரு ஆண் உருவமும் இடது புறம் பெண்ணின் உருவமும் நின்ற கோலத்தில் அமைந்துள்ளன. அவர்கள் யார் எனக் கண்டறியப்படவில்லை.
கி÷ஷார் குணாலின் கூற்றுப்படி சமாஸ் கிராமம் குப்தர் மவுரியர் சாம்ராஜ்யக் காலக் கட்டங்களில் சிற்பிகளின் குடியிருப்பாகவும், சிற்பக் கூடங்கள் பல நிறைந்து சீரும் சிறப்புமாகத் திகழ்ந்திருக்கிறது என அறிகிறோம். அதற்கேற்ப மேலும் நிறைய சிலைகள் இவ்விடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, கலை அம்சம் நிறைந்த லக்ஷ்மி தேவியின் சிலை ஒன்றும் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த விஷ்ணு சிலை அக்குளத்தின் மத்தியில் 15 பீகா பரப்பு நிலத்தில் சாதாரணக் கொட்டகையின் கீழ் ஸ்தாபனம் செய்யப்பட்டு நித்திய ஆராதனை கைங்கர்யங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மக்கள் இவரைத் திருப்பதி பாலாஜியின் மறுவடிவமாகவே வழிபடுகிறார்கள். திருப்பதிக் கோயில் போலவே இச்சிலைக் கண்டெடுக்கப்பட்ட சமாஸ் கிராமத்தில் ஒரு ஆலயம் எழுப்ப பீகார் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.