புதுடில்லி; சத் பூஜைக்காக, போலீசார் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை, துணை போலீஸ் கமிஷனர் பிரஷாந்த் கவுதம் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
கீதா காலனி மற்றும் காந்தி நகர் பகுதிகளில் இன்று ஆய்வு செய்த, போலீஸ் துணை கமிஷனர் பிரஷாந்த் கவுதம், போலீசார் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகள், கூட்டத்தை கட்டுப்படுத்த மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின், அவர் நிருபர்களிடம் கூறும் போது,‘‘சத் பூஜை பண்டிகையை அமைதியான முறையில் கொண்டாட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். குறிப்பாக, யமுனை நதியை அணுகும் வழித்தடங்கள், போலீசார் பணியமர்த்துதல் போன்றவை குறித்து ஆய்வு மேற்கொண்டேன்,’’ என்றார். அவர் போலவே, யமுனை நதி பாயும் பகுதிகளில் உள்ள டில்லி போலீசின் வடக்கு, கிழக்கு, வட கிழக்கு மற்றும் தென் கிழக்கு மாவட்ட போலீஸ் உயரதிகாரிகளும், இந்த பூஜையை பெண்கள் சிறப்பாக செய்ய, தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.