திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் அஜித்குமார் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28அக் 2025 11:10
திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் அஜித்குமார் சுவாமி தரிசனம் செய்தார்.
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித்குமார். நடிகர் அஜித்குமார் பல்வேறு கோவில்களில் தரிசனம் செய்து வருகிறார். அவர் இன்று காலை திருப்பதி ஏழுமையலையான் கோவிலில் அதிகாலை சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக , கோவில் வளாகத்தில் நடந்து வந்த அஜித்குமாரை பார்த்த ரசிகர்கள் தல தல. என கோஷம் எழுப்பினர். இதை கண்டித்த அஜித் ’இது கோவில்’ என கூறிய செய்கை செய்தார். பின்னர் தரிசனம் முடித்து வெளியே வந்த அஜித் காது கேட்காத ஒரு ரசிகருடன் செல்பி எடுத்து சென்றார்.