சாத் பூஜை; மக்களின் நல்வாழ்வு மற்றும் செழிப்புக்காக ஜனாதிபதி பிரார்த்தனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28அக் 2025 10:10
புதுடில்லி; சாத் பூஜை என்பது சூரியக் கடவுளுக்கு நன்றி சொல்ல நடத்தப்படும் விழாவாகும். வடமாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விழாவானது நான்கு நாட்களுக்கு நடைபெறும். நான்காவது நாளில் நீர் நிலைகளில் கூடி மக்கள் பூஜை செய்து சூரிய பகவானை வழிபடுவர். இன்று சாத் பூஜையை முன்னிட்டு, ஜனாதிபதி திரௌபதி முர்மு சாத் பூஜை கொண்டாட்டங்களில் பங்கேற்றார், சூரியனுக்கு அர்க்யம் செலுத்தி வழிபட்டார். சக குடிமக்களின் நல்வாழ்வு மற்றும் செழிப்புக்காக ஜனாதிபதி பிரார்த்தனை செய்தார்.