மேட்டுப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28அக் 2025 12:10
கோவை; கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது.
முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் இருந்தாலும் சஷ்டி வழிபாடு மிக சிறந்ததாக கருத்தப்படுகிறது. மேட்டுப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழா சிறப்பாக நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வைபவம் இன்று நடந்தது. மணக்கோலத்தில் வள்ளி தேவையான சமேத சுப்பிரமணியர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.