காரமடை அடுத்த குருந்தமலையில், மிகவும் பழமையான குழந்தை வேலாயுதசுவாமி கோவில் உள்ளது. இங்கு சூரசம்ஹாரம் விழா, கடந்த, 22ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அபிஷேக அலங்கார பூஜை நடைபெற்றது. பின், நேற்று மாலை, 5:00 மணிக்கு சூரசம்ஹார விழா நடைபெற்றது. தொடர்ந்து இன்று திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. முன்னதாக கணபதி பூஜை, கணபதி ஹோமம், சுப்பிரமணிய ஹோமம், திரிசதி ஹோமம் உள்ளிட்டவை நடந்து ஸ்ரீ வள்ளி, தெய்வானை சமேத குழந்தை வேலாயுத சுவாமி உற்சவமூர்த்திக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குருந்தமலை கோவில் அறங்காவலர் குழு தலைவர் மோகனபிரியா, அறங்காவலர் உறுப்பினர்கள், செயல் அலுவலர் வனிதா, மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.