கந்த சஷ்டி விழா நிறைவு : திருத்தளிநாதர் கோயிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28அக் 2025 02:10
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழாநிறைவாக சுப்பிரமணிய சுவாமிக்கும் தெய்வானை அம்பாளுக்கும் நடந்த திருக்கல்யாணத்தில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.
குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.22ல் துவங்கியது. தொடர்ந்து தினசரி மாலையில் முருகனுக்கு அபிேஷக,ஆராதனைகள் நடந்தது. நேற்று சூரசம்ஹாரம் நடந்தது. இன்று காலை 10:00 மணிக்கு திருமுருகன் திருப்பேரவை அலுவலகத்திலிருந்து பக்தர்கள் சீர்வரிசையுடன் கோயில் வந்தனர். தொடர்ந்து காலை 10:40 மணிக்கு பாஸ்கர்,ரமேஷ் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யர்களால் யாகபூஜைகள் துவங்கின. சிறப்பு பூஜைகள் முடிந்த பின்னர் காலை 11:30 மணி அளவில் சுப்பிரமணிய சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருமாங்கல்ய பூட்டு சிவாச்சார்யர்களால் நடந்தது. திரளாக பெண்கள் பங்கேற்று திருக்கல்யாணத்தை தரிசித்தனர். தொடர்ந்த திருமாங்கல்ய கயிறு,இனிப்பு வழங்கப்பட்டது. பக்தர்கள் திருமண மொய் செய்தனர். தொடர்ந்து கல்யாண விருந்து பரிமாறப்பட்டது. ஏற்பாட்டினை திருமுருகன் திருப்பேரவையினர் செய்தனர்.