Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேண்டுதலை நிறைவேற்றும் ஸ்ரீ லட்சுமி ...
முதல் பக்கம் » துளிகள்
ராமர் இட்ட கட்டளை: 7 கிராமங்களுக்கு தெய்வமான ஹனுமன்
எழுத்தின் அளவு:
ராமர் இட்ட கட்டளை: 7 கிராமங்களுக்கு தெய்வமான ஹனுமன்

பதிவு செய்த நாள்

29 அக்
2025
12:10

ராமரின் சொல்லை கேட்டு, ஏழு கிராம மக்களின் தெய்வமாக ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார். ஆம்... விஜயபுரா மாவட்டம், முத்தேபிகலின் எலகூர் கிராமத்தில் அமைந்து உள்ளது எலகுரேஸ்வரர் ஆஞ்சநேய சுவாமி கோவில்.


காவல் வசிஷ்ட ராமாயணத்தில், கிருஷ்ணா ஆற்றங்கரை அருகே ராமர் வந்தார். இங்குள்ள எலகூர், பூதிஹால், காசினா, ஹுந்தி, மசுர்தி, சந்திரகிரி, ஆலாலதிண்டி ஆகிய ஏழு கிராமங்களுக்கு காவலாக நின்று அருள்பாலிக்கும்படி, ஹனுமனுக்கு உத்தரவிட்டார். அவரின் சொல்லை ஏற்று, ஹனுமனும் இன்றும் அருள்பாலித்து வருகிறார்.


இப்பகுதி மக்கள் கூற்றுப்படி, இக்கோவிலின் வடமேற்கு திசையில், கோனிகெரே அமைந்திருந்தது. அதன் அருகில் பெரிய பாறைகளுக்கு இடையே, ஸ்ரீ வெங்கடேஸ்வரர் – ஸ்ரீதேவி கோவில் கட்டியிருந்தனர். முஸ்லிம் ஆட்சி காலத்துக்கு பின், இக்கோவிலின் அர்ச்சகருக்கு கனவு வந்தது. அதில் தோன்றிய ஹனுமன், இந்த பாறையில் தான் மறைந்திருப்பதாக கூறி மறைந்தார்.


மறுநாள் காலையில், ஹனுமன் குறிப்பிட்ட பாறையை அவசர அவசரமாக உடைத்தபோது, அதில் இருந்த ஹனுமன் சிலை, பல துண்டுகளாக உடைந்தது. இதை பார்த்து அர்ச்சகர் வேதனை அடைந்தார்.


ஒன்றிணைந்தது அன்றிரவு மீண்டும் அவருக்கு கனவு வந்தது. அதில், ‘உடைந்த கற்களை, தற்போது உள்ள கோவிலுக்கு எடுத்து வரும்படியும், உடைந்த கற்களை ஒன்றாக அடுக்கி வைத்து கதவை மூடிவிடவும். ஏழு நாட்களுக்கு பின், மீண்டும் கதவை திறந்தால், முழு உருவமாக மாறியிருக்கும்’ என்று கனவில் வந்த ஹனுமன் கூறினார்.


இதன்படி செய்த அர்ச்சகருக்கு, ஆறாம் நாள் துாக்கம் வரவில்லை. உடைந்த கற்கள் எப்படி ஒன்றாகும் என்று அறிய ஆசைப்பட்டார். கதவை திறந்து பார்க்க விருப்பப்பட்டார். அதன்படி மறுநாள், அதாவது ஏழாம் நாள் காலையில் கதவை திறந்தார். சிலையின் மேல்பகுதிகள் அனைத்தும் சரியாக இணைந்திருந்தது. கீழ்பகுதியின் சில பாகங்கள் இணையாமல் இருந்ததை பார்த்து வேதனை அடைந்தார்.


அன்று இரவும் கனவில் தோன்றிய ஹனுமன், முறைப்படி வேத பாராயணம் கற்றுக்கொண்டு, கிருஷ்ணா ஆற்றில் இருந்து தினமும் தண்ணீர் எடுத்து வந்து, தனக்கு அபிஷேகம் செய்யும்படி கூறினார். அதன்படி அவர் செய்தார். இதையடுத்து விக்ரகம் முழு வடிவம் பெற்றது. இன்றும் கூட கிருஷ்ணா நதியில் இருந்து தண்ணீர் எடுத்து வரப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.


480 ஏக்கர் நிலம் அதன்பின் வந்த மராட்டிய மன்னர் ஸ்ரீபாஜிராவ், கோவில் பராமரிப்புக்கென, 480 ஏக்கர் நிலத்தை வழங்கி, ஒரு நாள் கூட தவறாமல், தினமும் பூஜைகள் நடக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


இந்த கோவிலுக்கு ஏழு கிராமத்தினர் மட்டுமின்றி, மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். நம்முடன் பேசும் ஹனுமன் என்றும் கூறுகின்றனர். நாம் நினைத்த காரியம் நிறைவேற, ஹனுமனிடம் பூ வைக்க வேண்டும். பூ வலதுபுறமாக விழுந்தால் நிறைவேறும் என்றும்; இடது புறமாக விழுந்தால் நடக்காது என்றும் அர்த்தம்.


கொரோனா காலத்தின் முதல் ஊரடங்கின்போது, பக்தர் ஒருவர் வேண்டினார். அவருக்கு பூ எந்த பக்கமும் விழவில்லை. இரண்டாவது ஊரடங்கிலும் வேண்டினார்; அப்போதும் விழவில்லை. இதன் பின் ஊரடங்கு முடிந்த பின் வேண்டியபோது, வலதுபுறமாக பூ விழுந்ததாக கோவில் அர்ச்சகர் நாராயண ஹனுமந்தப்பா பூஜார் தெரிவித்தார்.


கோவிலில் பிராமணர்கள் கமிட்டி உறுப்பினர்களாக இருந்தாலும், சத்ரியர்களே பூஜை செய்து வருகின்றனர்.


எப்படி செல்வது?

பெங்களூரில் இருந்து ரயிலில் செல்வோர், அலமாட்டி ரயில் நிலையத்துக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு பஸ், டாக்சியில் செல்லலாம்.

பஸ்சில் செல்வோர், நிடஹுந்தி பஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து 7 கி.மீ., தொலைவில் உள்ள எலகூருக்கு பல ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதில் பயணம் செய்யலாம்.

திறப்பு நேரம்: காலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரை

திருவிழா: கார்த்திகை மாதத்தில் எலகூரு திருவிழா, தீப உத்சவம், ஸ்ரீராமநவமி உத்சவம்.

தொடர்புக்கு: 76768 58112

 
மேலும் துளிகள் »
temple news
கோஷ்டாஷ்டமி  என்பது பசுக்களைப் போற்றி வழிபடும் நாளாகும். கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமி திதியில் ... மேலும்
 
temple news
எந்த ஒரு நல்ல காரியத்தை துவங்கும் முன் விநாயகருக்குச் சிதறுகாய் உடைப்பது வழக்கம். தேங்காயின் மீதுள்ள ... மேலும்
 
temple news
பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். சனிக்கிழமை திரயோதசி திதி ... மேலும்
 
temple news
நவராத்திரி முடிந்த பத்தாவது நாளில் விஜயதசமியை கொண்டாடுகிறோம். இதன் சிறப்புகளை பார்ப்போம்.புதிய ... மேலும்
 
temple news
துமகூரு மாவட்டம், நொனவினகெரே பகுதியில் ஸ்ரீ லட்சுமி பெட்டேராய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar