சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோவிலில் கவர்னர் ரவி சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30அக் 2025 12:10
கன்னியாகுமாரி; தமிழக தமிழக கவர்னர் ஆர். என். ரவி சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சுற்றுப்பயணமாக தனது குடும்பத்தினருடன் கன்னியாகுமரி வந்தார். இன்று காலை கவர்னர் ஆர்.என்.ரவி, குடும்பத்தினருடன் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி தனது குடும்பத்தினருடன் கோவிலில் உள்ள தட்சிணா மூர்த்தி, கொன்றையடி, நீலகண்ட விநாயகர், மூலஸ்தானத்தில் உள்ள தாணுமாலயன், திருவேங்கட விண்ணகர பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் சன்னதிகளுக்கு சென்று பயபக்தியுடன் தரிசனம் செய்தார். பின் அங்கிருந்து கிளம்பி சென்றார்.