திருத்தணி; சாய்பாபா கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
திருத்தணி ஒன்றியம் கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல் கிராமங்களில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில்களில் இன்று வியாழக்கிழமை ஒட்டி, மூலவருக்கு காலையில் பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. மதியம், 12:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் மதிய ஆரத்தி நடந்தது. மாலை, 6:00 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில், கோவில் வளாகத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இதில் திருத்தணி, கே.ஜி.கண்டிகை, தலையாறிதாங்கல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் வழிப்பட்டனர்.
*ஆர்.கே.பேட்டை அடுத்த காந்தகிரி மலையடிவாரத்தில் உள்ளது சாய்பாபா கோவில். இந்த கோவிலில் இன்று காலை 10:00 மணிக்கு சாய்பாபாவுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு தேஜ் ஆரத்தி செய்யப்பட்டது. ஆர்.கே.பேட்டை, சந்திரவிலாசபுரம், மோசூர், சுந்தரராஜபுரம், அம்மையார்குப்பம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கற்றனர். இதே போல், பத்மாபுரம் சாய்பாபா கோவில், பள்ளிப்பட்டு அடுத்த கரிம்பேடு சாய்பாபா கோவில்களிலும் நேற்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.