திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் சம்பக சஷ்டி விழா நவ.21ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03நவ 2025 12:11
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு சம்பகசஷ்டி விழா நவ.21ல் துவங்குகிறது.
குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பைரவர் யோகத்தில் அமர்ந்த நிலையில் மேற்கு நோக்கி எழுந்தருளுகிறார். இவருக்கு அஷ்டமி தினங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். மேலும் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் சம்பகசஷ்டி விழா ஆறுநாட்கள் நடைபெறும். அசுரர்களின் மாயையில் இருந்து உலகைக் காப்பாற்ற, குமார ரூபத்தில் இருந்த பைரவர், அந்தகாசுரன் மற்றும் சம்பகாசுரனை வதம் செய்ததை அடுத்து இந்த விழா யோகபைரவருக்கு நடத்தப்படுகிறது. இந்த ஆ்ண்டு நவ.21ல் விழா துவங்குகிறது. தினசரி பைரவர் சன்னதியில் யாகசாலையில் காலை 9:00 மணி அஷ்டபைரவர் யாகமும் துவங்கி, காலை 11:30 மணிக்கு பூர்ணாகுதி, மதியம் 12:00 மணிக்கு அபிேஷகம், மதியம் 1:00 மணிக்கு தீபாராதனையும் நடைபெறும். மீண்டும் மாலை 4:30 மணிக்கு அஷ்ட பைரவர் யாகம் துவங்கும். தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு பூர்ணாகுதி, இரவு 7:15 மணிக்கு அபிேஷகம், இரவு 7:46 மணிக்கு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து ஆறு நாட்களிலும் காலை,மாலை இரு வேளைகளில் அஷ்டபைரவ யாகம்,அலங்கார தீபாராதனை நடைபெறும். ஏற்பாட்டினை சம்பக சஷ்டி விழாக்குழுவினர் செய்கின்றனர்.