திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் உழவாரப்பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03நவ 2025 12:11
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் உழவாரப்பணி நடந்தது. தூத்துக்குடி எட்டயபுரம் அடியவருக்கு அடியவர் உழவார பணிக்குழு மற்றும் திருநெல்வேலி மீனாட்சி சுந்தரேஸ்வரர் உழவாரப்பணி குழு சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உழவாரப் பணியில் ஈடுபட்டனர். திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள், பத்மாஸனி தாயார், தெர்ப்பசயன ராமர் கோயில் உட்பிரகாரம், அர்த்தமண்டபம், வெளிப்பிரகாரம், கோசாலை மற்றும் தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை செய்தனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் இம்பீரியல் சொக்கலிங்கம் பிள்ளை, செல்வராஜ், கோயில் செயல் அலுவலர் கிரிதரன், மற்றும் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர். தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொண்டர் படை அமைத்து உழவாரப் பணிகளை செய்து வருவதை கடமையாக கொண்டு வருகின்றனர் இக்குழுவினர்.