தினமலர் செய்தி எதிரொலி; கோல்வார்பட்டி கோயிலில் சீரமைப்பு பணிகள் தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06நவ 2025 11:11
சாத்துார்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக கோல்வார்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சாத்துார் அருகே கோல்வார் பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தனி புலி கண்டு கலங்காத கெண்டலப்ப கெச்சிலப்ப நாயக்கர் என்ற மன்னரால் கட்டப்பட்டது. பராமரிப்பின்றி காணப்பட்ட இக்கோயிலின் சுற்றுச்சுவர் செடிகள் முளைத்தும், விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்தது. இதுகுறித்த செய்தி தினமலர் நாளிதழில் படத்துடன் வெளியானது. இதனைத் தொடர்ந்து இக்கோயிலை ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ரூ 1.60 கோடி மதிப்பில் புனரமைக்கவும்,புதிய தளக்கல் பதிக்கவும், கொடி மரம் நடவும் ,கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகளை முடுக்கி விட்டனர்.