அமிர்த கடேஸ்வரருக்கு ஐப்பசி கடைசி சோம வார சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10நவ 2025 01:11
கோவை; சிங்காநல்லூர் சக்தி விநாயகர் கோவிலில் அமைந்துள்ள அமிர்த கடேஸ்வரருக்கு ஐப்பசி மாதம் கடைசி சோம வார வழிபாடு நடைபெற்றது, விழாவை முன்னிட்டு அமிர்த கடேஸ்வரருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. இதில் சர்வ புஷ்ப அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ தரிசனம் பெற்றனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.