விழுப்புரத்தில் சாலையோரம், பஸ் நிலையம், ரயில் நிலையம், கோவில் ஆகிய பகுதிகளில் கடும் குளிரால் அவதிப்பட்டு வரும் ஆதரவற்ற 300 பேருக்கு, தெற்கு ரயில்வே காலனியில் உள்ள வள்ளலார் சத்திய தரும சாலை மையம் சார்பில் போர்வை மற்றும் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. வள்ளலார் சத்திய தரும சாலை நிறுவனர் அண்ணாமலை தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சிவக்குமார், பாலசுப்ரமணியன், விக்னேஷ், தினேஷ், சுப்ரீம் அரிமா சங்க பொருளாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தனர். முன்னாள் சேர்மன் ஜனகராஜ், செல்லமுத்து நலத்திட்டங்கள் மற்றும் மதிய உணவை வழங்கினர். சன்மார்க்க அன்பர்கள் பலராமன், சரவணபவன், சங்கர், வேல்முருகன், வைரமணி, சங்கர், வெங்கடேசன், குகன், வாசுதேவன், ஜெயக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.