பிபா பஞ்சமி: குஜராத்தில் இருந்து நேபாளம் சீதா தேவிக்கு சமர்பிக்க பட்ட 111 மீட்டர் பிரமாண்ட சேலை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24நவ 2025 12:11
நேபாளம்; நேபாளத்தில் உள்ள சீதா கோயிலுக்கு இந்தியா 111 மீட்டர் அளவிலான சுனாரி வழங்கியது. பிபா பஞ்சமி விழாவையொட்டி, இந்தியாவின் குஜராத்தில் உள்ள சூரத் நகரத்தைச் சேர்ந்த ஒரு அறக்கட்டளையால் நேபாள சீதா (ஜானகி )கோயிலுக்கு 111 மீட்டர் அளவிலான சுனாரி வழங்கப்பட்டது.
சீதாவின் பிறந்த இடமாக கருதப்படும் பண்டைய நகரமான ஜனக்பூரில் செவ்வாய்க்கிழமை பிபா பஞ்சமி விழா சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்காக நகர் விழாகோலம் பூண்டுள்ளது. இதற்காக இந்தியாவின் குஜராத்தில் உள்ள சூரத் நகரத்தைச் சேர்ந்த ஜின் மாதா அறக்கட்டளையால் அனுப்பப்பட்ட சிவப்பு நிற சுனாரியுடன் ஏராளமான பக்தர்கள் பண்டைய வரலாற்று நகரமான ஜனக்பூரைச் சுற்றி வந்தனர். தொடர்ந்து, நேபாளம் சீதா தேவி கோயில் ஒப்படைக்கப்பட்டது. அயோத்தியில் உள்ள ராமர் மந்திரின் பிராணபிரதிஷ்டைக்குப் பிறகு நடைபெறும் இரண்டாவது பிபா பஞ்சமி கொண்டாட்டம் இதுவாகும். கடந்த ஆண்டு, அயோத்தியின் ராமர் கோவிலில் பிராண பிரதிஷ்டைக்குப் பிறகு, ராமர் மற்றும் மாதா சீதாவின் திருக்கல்யாணம் இங்கு பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது குறிபித்தக்கது.