அயோத்தி ராமர் கோவிலில் பிரதமர் மோடி; வசிஷ்டர், விஸ்வாமித்திரர் கோயில்களில் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25நவ 2025 10:11
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலின் 161 அடி உயர கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள 30 அடி உயர கம்பத்தில் இன்று (நவ.,25) பிரதமர் மோடி கொடியேற்றுகிறார். இன்று காலை ராமர் கோவில் வந்த பிரதமர், மகரிஷி வசிஷ்டர், மகரிஷி விஸ்வாமித்திரர், மகரிஷி அகஸ்தியர், மகரிஷி வால்மீகி, தேவி அஹில்யா, நிஷாத்ராஜ் குஹா மற்றும் மாதா ஷபரி ஆகியோரின் கோயில்கள் உள்ள சப்தமந்திருக்கு பிரதமர் நரேந்திர மோடி தரிசனம் செய்து வருகிறார்.
அயோத்தி நகர். ராமர் கோயிலின் 161 அடி உயர கோபுரத்தின் மீது 30 அடி உயர கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (நவ.,25) தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா காலை 11:52 மணி முதல் பிற்பகல் 12:35 மணி வரை சுப முகூர்த்த நேரத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்காக விழா கோலம் பூண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் பிரதமர் மோடி 30 அடி உயர கம்பத்தில் காவிக்கொடியை கொடியேற்றுகிறார்.