Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நம்பாதவர்களுக்கும் வாய்ப்பை ... கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா துவக்கம் கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரகத்திற்கு செல்ல பக்தர்களுக்கு தடை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரகத்திற்கு செல்ல பக்தர்களுக்கு தடை

பதிவு செய்த நாள்

29 நவ
2025
11:11

தேவிபட்டினம்; வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடல் நீர்மட்டம் உயர்ந்து நவக்கிரகங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால், நவக்கிரகங்கள் அமைந்துள்ள பகுதிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் கடலுக்குள் அமைந்துள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நவபாஷாணத்தில் ஆடி, தை அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் பல்வேறு தோஷ நிவர்த்திகள் வேண்டி பரிகார பூஜைகள் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் பகுதியாகவும் உள்ளது. இந்த நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த அழுத்த தாழ்வுநிலை காரணமாக, கடலில் சீற்றம் ஏற்பட்டு கடல் நீர் மட்டம் உயர்ந்தன் காரணமாக, கடந்த சில நாட்களாக நவக்கிரகங்கள் தண்ணீரில் மூழ்கிக் காணப்பட்டன. இதனால் பக்தர்கள் நடைமேடை வழியாக சுற்றி வந்து தரிசனம் செய்தனர். இந்த நிலையில் நேற்று, கடல் சீற்றம் அதிகரித்து நடைமேடை வரை கடல் நீர் சூழ்ந்ததால், நவக்கிரகங்கள் அனைத்தும் முழுமையாக தண்ணீரில் மூழ்கின. தொடர்ந்து கடல் சீற்றத்துடன் கனமழை பெய்து வருவதன் காரணமாக, பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நேற்று காலை முதல் நவக்கிரகம் அமைந்துள்ள கடல் பகுதிக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் கடற்கரையில் நின்றாவது தரிசனம் செய்து திரும்பிச் சென்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar