Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவிபட்டினம் நவபாஷாண ... சேவூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில் தீர்த்த குட ஊர்வலம் சேவூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

29 நவ
2025
11:11

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள கரிவரதராஜ பெருமாள் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா துவங்கியது.


பெரியநாயக்கன்பாளையத்தில் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதையொட்டி கடந்த சில மாதங்களாக கோவிலை சுற்றி கற்களை பதித்தல், தங்க கொடிமரம், அரங்க மண்டபத்துக்கு டைல்ஸ் பதித்தல், கோபுரங்களுக்கு வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு புனரமைப்பு அமைப்பு பணிகள் நடந்து வந்தன. இவை நிறைவு பெற்றதை ஒட்டி கோயிலின் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சிகள், சாந்தி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து முதல் கால வேள்வி, மங்கல இசை, குருதட்சனை கொடுத்தல், புனித நீர் தெளித்தல், கங்கன நூல் கட்டுதல், ஆராதனை புற்றுமண் எடுத்தல், யாகசாலை பிரவேசம், வேத பிரபந்த பாராயணம், இதிகாச புராணங்கள் பாராயணம் செய்தல் மற்றும் ஆரத்தி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை, 8.00 மணி அளவில் இரண்டாம் கால வேள்வி, மதியம்,1.00 மணி அளவில் கோபுர கலசங்கள், விமானம் ஆகியவற்றுக்கு பூஜை செய்தல், மாலை மூன்றாம் கால வேள்வி பூஜை நடந்தன. இன்று நான்காம் கால வேள்வி பூஜை நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா நாளை ஞாயிற்றுக்கிழமை காலை, 5.00 மணிக்கு ஆறாம் கால வேள்வியோடு தொடங்குகிறது. காலை, 8.00 மணிக்கு மூலவர் கோபுரம், ராஜகோபுரம், ஆண்டாள் திருக்கோவில் கோபுரம் ஆகியவற்றிற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, அன்னதானம், பெருமாள் திருக்கல்யாணம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar