Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை திருக்குடை யாத்திரை: ... பாழடைந்த சிவன், விஷ்ணு கோவில் புனரமைக்க கிராம மக்கள் கோரிக்கை பாழடைந்த சிவன், விஷ்ணு கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தருமை ஆதீனம் 26வது குருமகா சந்நிதானம் குருபூஜை விழா
எழுத்தின் அளவு:
தருமை ஆதீனம் 26வது குருமகா சந்நிதானம் குருபூஜை விழா

பதிவு செய்த நாள்

29 நவ
2025
11:11

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் 26வது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் 1971ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை 48 ஆண்டுகள் ஞானபீடத்தில் அமர்ந்து அருளாட்சி செய்தார். சமயம் வளரவும், சமூகம் மலரவும், வேத ஆகம புராண இதிகாச திருமுறை சாத்திரம் தழைக்கவும், சைவமும், தமிழும் தழைத்தோங்கவும் திருப்பணிகள் நிகழவும் அறப்பணியும் செய்தருளினார். இவர் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி பரிபூரணம் அடைந்தார். அவரது திருமேனி ஆனந்தபரவசர் பூங்காவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அங்கு அவரின் வழித்தோன்றலான தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் முயற்சியில் கருக்கல் திருப்பணியில் குருமூர்த்தம் அமைக்கப்பட்டு ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் குருபூஜை விழா நடந்து வருகிறது. அதன்படி நேற்று நடந்த 6ம் ஆண்டு குருபூஜை விழாவையொட்டி தருமை ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருக்கூட்டத்து அடியவர்கள் படைசூழ எழுந்தருளி குருமூர்த்தத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபாடு நடத்தினார். தொடர்ந்து சிதம்பரம் நிருத்தநாதன் ஓதுவாருக்கு பத்தாயிரம் பொற்கிழிவி வழங்கி கவுரவித்தார். மதியம் மகேஸ்வரபூஜை நடந்தது. குருபூஜையையொட்டி  கருத்தரங்கம், திருமுறை விண்ணப்பம், பட்டிமன்றம் ஆகிய நிகழ்வுகள் நடந்தது. இதில் திருப்பனந்தாள் காசிமடத்து அதிபர் சபாபதி தம்பிரான் சுவாமிகள், தருமை ஆதீனம் தம்பிரான் சுவாமிகள், டாக்டர்கள் செல்வம், ராஜசேகர், மத்திய அரசு வக்கீல் ராஜேந்திரன், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கல்யாணம், ஆதீன பொது மேலாளர் ரங்கராஜன் ,கோவில்களின் கண்காணிப்பாளர் மணி, ஆதீன  கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் உட்பட திரளானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
காரமடை: யுகாதி பண்டிகை முன்னிட்டு காரமடை ரங்கநாதர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar