Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தருமை ஆதீனம் 26வது குருமகா சந்நிதானம் ... புதிய இந்தியா யாருக்கும் தலைவணங்காது மக்களை காக்கவும் தயங்காது: பிரதமர் மோடி புதிய இந்தியா யாருக்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாழடைந்த சிவன், விஷ்ணு கோவில் புனரமைக்க கிராம மக்கள் கோரிக்கை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பாழடைந்த சிவன், விஷ்ணு கோவில் புனரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

பதிவு செய்த நாள்

29 நவ
2025
11:11

பாழடைந்த சிவன், விஷ்ணு கோவில் புனரமைக்க கிராம மக்கள் கோரிக்கை


திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே நுாற்றாண்டு கடந்த சிவன் கோவில் மற்றும் விஷ்ணு கோவிலை புனரமைத்து, வழிபாடு நடத்த கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


திருவள்ளூர் – செங்குன்றம் சாலையில் கரிக்கலவாக்கம் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு, 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நெடுஞ்சாலையில் இருந்து கரிக்கலவாக்கம் வயல்வெளி பகுதியில், சிவன் கோவில் உள்ளது. பல நுாற்றாண்டுக்கு முன் கட்டப்பட்டதாக, அப்பகுதி மக்கள் கூறும் இக்கோவிலின் மூலவர் சாம்பசிவ மூர்த்தி என்றழைக்கப்படுகிறார். பார்வதி தேவி, சிவன் மடியில் அமர்ந்த நிலையில், அழகிய கற்சிலை இங்கு அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் லிங்கம் இருந்திருக்கலாம் எனவும், கோவில் சிதிலமடைந்து, பாழடைந்து இருப்பதால், அந்த சிலை மாயமாகி இருக்கலாம் எனவும், கிராம மக்கள் கூறுகின்றனர். கோவிலுக்குள், துர்கா சிலை பாதி உடைந்த நிலையில் உள்ளது. மேலும், கோவிலுக்கு அருகே உள்ள குளம் துார்ந்து போய் உள்ளது. சிறப்பு வாய்ந்த சிவன் கோவில், பராமரிப்பின்றி பாழடைந்துள்ளது. கோவில் சுவர் ஆங்காங்கே இடிந்து, செடிகள் வளர்ந்துள்ளன.


விஷ்ணுவாக்கம் ஊராட்சி எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள லட்சுமி நரசிம்மர் சிலை, ஆதரவற்ற நிலையில் காணப்படுகிறது. தாயார் லட்சுமி, நரசிம்மர் மடியில் அமர்ந்து சாந்தமாக காட்சியளிக்கிறார். இந்த சிலையும், முறையாக வழிபாடின்றி உள்ளது.எனவே, ஹிந்து சமய அறநிலையத்துறையினர், இரண்டு கோவில்கள் அமைந்துள்ள இடத்தில் அகழாய்வு செய்து, கோவிலின் பாரம்பரியத்தை வெளிக்கொணர வேண்டும். மேலும், கோவிலை கட்டி, முறையாக வழிபாடு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 
temple news
திருநகர்: விளாச்சேரி அழகு நாச்சியம்மன் கோயில் அய்யனார் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா நேற்று ... மேலும்
 
temple news
மாங்காடு; மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில், நவராத்திரி விழா வரும் 10ம் தேதி துவங்கி, அக்., 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar