Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாழடைந்த சிவன், விஷ்ணு கோவில் ... மும்பை ஸ்ரீ அஹோபில மடத்தில் காஞ்சி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தரிசனம் மும்பை ஸ்ரீ அஹோபில மடத்தில் காஞ்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதிய இந்தியா யாருக்கும் தலைவணங்காது மக்களை காக்கவும் தயங்காது: பிரதமர் மோடி
எழுத்தின் அளவு:
புதிய இந்தியா யாருக்கும் தலைவணங்காது மக்களை காக்கவும் தயங்காது: பிரதமர் மோடி

பதிவு செய்த நாள்

29 நவ
2025
12:11

உடுப்பி: “பயங்கரவாத தாக்குதல்களின் போது, முந்தைய அரசுகள் மவுனம் காத்தன. ஆனால், இந்த முறை புதிய இந்தியா யாருக்கும் தலைவணங்காது. குடிமக்களை பாதுகாக்கவும் தயங்காது,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


கர்நாடகாவின் உடுப்பியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ கிருஷ்ணர் மடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். முன்னதாக, உடுப்பி டவுனில் உள்ள நாராயணகுரு சதுக்கத்தில் இருந்து கல்சங்கா சந்திப்பு வரை, பிரதமர் சாலை பேரணி நடத்தினார்.  


திருப்தி அளிக்கிறது; அப்போது, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் பா.ஜ., தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின், கிருஷ்ணர் மடத்துக்கு சென்ற பிரதமருக்கு, நிர்வாகம் சார்பில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. மடத்தின் உள்ளே அமைந்துள்ள கிருஷ்ணர் கோவிலின் தங்க கதவை திறந்து உள்ளே சென்ற அவர், தீர்த்த அபிஷேகம் செய்து வழிபட்டார். ஸ்ரீபுட்டிகே மடத்தின் தலைவர் ஸ்ரீசுகுணேந்திர தீர்த்த சுவாமியை சந்தித்து ஆசி பெற்றார். இதையடுத்து, ஹிந்துக்களின் புனித நுாலான பகவத் கீதையை, 1 லட்சம் பேர் பாராயணம் செய்த நிகழ்வில் மோடி பங்கேற்றார். 


அப்போது அவர் கூறியதாவது: பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் ஜகத்குரு ஸ்ரீமத்வாச்சாரியார் ஆகியோரின் ஆசீர்வதிக்கப்பட்ட பூமிக்கு வருவது எனக்கு திருப்தி அளிக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் லட்சம் பேர் ஒன்றாக அமர்ந்து பகவத் கீதையின் ஸ்லோகங்களை உச்சரித்தபோது, உலகெங்கிலும் உள்ள மக்கள் இந்தியாவின் ஆன்மிக பாரம்பரியத்தை கண்டனர். பொது நலனுக்காக பாடுபடுமாறு கீதையில் பகவான் கிருஷ்ணர் நமக்கு சொல்கிறார். ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற பகவத் கீதையின் செய்தியே, மக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு திட்டங்களின் அடிப்படை. அமைதி மற்றும் உண்மைக்காக பாடுபடவும், அராஜகம் செய்பவர்களை அழிக்க வேண்டியதன் அவசியத்தையும் பகவத் கீதை நமக்கு கற்பிக்கிறது. கீதையின் வார்த்தைகள், தனிநபர்களை மட்டுமல்ல நாட்டின் கொள்கைகளையும் வடிவமைக்கின்றன. நாங்கள், உலகமே ஒரு குடும்பம் என்பதில் நம்பிக்கை வைத்துள்ளோம். 


சுதர்சன சக்கரம்: ஜம்மு - காஷ்மீர் பஹல்காமில் கடந்த ஏப்ரலில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் உட்பட 26 பேர் பலியாகினர். ஏற்கனவே நடந்த பயங்கரவாத தாக்குதல்களின் போது, முந்தைய அரசுகள் மவுனம் காத்தன. ஆனால், இந்த முறை புதிய இந்தியா யாருக்கும் தலைவணங்கவில்லை. அதேசமயம் தன் குடிமக்களை பாதுகாக்கவும் தயங்கவில்லை. தெய்வீக ஞானம் மற்றும் ஆன்மிக ஆற்றல் பெற்ற சுதர்சன சக்கரம் போல் இருந்த நம் விமானப்படையின் எஸ் - 400 வான் பாதுகாப்பு கவசம், அண்டை நாடான பாகிஸ்தானின் தாக்குதல்களில் இருந்து நம்மை காத்தன. தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு ஆக்கிரமிக்க நினைக்கும் எதிரிகளை, இந்த சுதர்சன சக்கரம் அழிக்கும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, கிருஷ்ணர் சன்னிதிக்கு முன்னால் உள்ள சுவர்ண தீர்த்த மண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar