மும்பை ஸ்ரீ அஹோபில மடத்தில் காஞ்சி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தரிசனம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29நவ 2025 12:11
மும்பை; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் மும்பையில் தங்கி பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார். அதன் ஒருபகுதியாக இன்று (29ம் தேதி) காலை மும்பை செம்பூரில் உள்ள ஸ்ரீ அஹோபில மடத்திற்கு வருகை தந்தார். பூர்ணகும்பம் மற்றும் வேத முழக்கங்களுடன் சுவாமிக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அஹோபில மடத்தில் பல்வேறு சன்னதிகளில் விசேஷ பூஜைகள் மற்றும் சேவைகளில் சுவாமிகள் பங்கேற்று தரிசனம் செய்தார். நரசிம்மருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்ட பூஜ்யஸ்ரீ சங்கராச்சாரியார் சுவாமிகள் அனுக்ரஹ பாஷணம் செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.