திருப்பூர்: திருப்பூர் அய்யப்பன் கோவிலில் சாய்பக்தர்கள் சாய்பஜன் நடத்தினர்.
திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜையின் போது ஸ்ரீசத்ய சாய் பக்தர்கள் சாய் பஜன் நடத்துவது வழக்கம். அவ்வகையில் தற்போது மண்டல பூஜை அய்யப்பன் கோவிலில் நடக்கிறது. இதில் திருப்பூர் ஸ்ரீசத்ய சாய் பக்தர்கள் கலந்து கொண்டு சாய் பஜன் நடத்தினர்.
திருப்பூர் சத்ய சாய் சேவா நிறுவன நிர்வாகிகள், திருப்பூர் பகுதி சாய் சமிதிகளின் சாய் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பக்திப் பாடல்கள், பஜனைப் பாடல்கள் பாடினர். இதில், திரளான அய்யப்ப பக்தர்கள் பங்கேற்றனர்.