பதிவு செய்த நாள்
01
ஜன
2013
11:01
புதுச்சேரி: லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆன்மிக வழிபாட்டு மன்றம் சார்பில், சிங்கிரி கோவிலுக்குப் புனித பாத யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆன்மிக வழிபாட்டு மன்ற தலைவர் இளங்கோ அளித்த பேட்டி:லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆன்மிக வழிபாட்டு மன்றம் சார்பில், ஆண்டு தோறும், ஜனவரி முதல் ஞாயிற்றுக்கிழமை சிங்கிரிகோவிலுக்குப் பாதயாத்திரை நடத்தப்படுகிறது. அதன்படி வரும் 6ம் தேதி காலை 6 மணிக்கு திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள் தலைமையில், காந்தி வீதி வரதராஜப் பெருமாள் கோவிலில் புறப்படும் பாதயாத்திரை, கடலூர் சாலை, அபிஷேகப்பாக்கம் வழியாக சிங்கிரிகோவிலை சென்றடைகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட பஜனை குழுவினர், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். முடிவில் சிங்கிரிகோவில் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில், சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம் நடக்கிறது.கோவில் வளாகத்தில், காலை 10 மணிக்கு, சொற்பொழிவு, திவ்ய நாம பஜனை, பிருந்தாவன பஜனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஜீயர் சுவாமிகள் தலைமை தாங்குகிறார். திண்டிவனம் நம்மாழ்வார் சபை சொற்பொழிவாளர் ஆஷா, "புரந்தரதாசர் சரித்தரம் என்ற தலைப்பிலும், டாக்டர் ஜோசப், "சிறுவனுக்கு அருளிய சிங்கம் என்ற தலைப்பிலும் பேசுகின்றனர். சரண்யாவின் பக்தி இசை நிகழ்ச்சி, ஜெகதீசன் குழுவினரின் பக்தி இசைக் கச்சேரி நடக்கிறது.இவ்வாறு இளங்கோவன் கூறினார். வழிபாட்டு மன்ற கவுரவத் தலைவர் பக்தவச்சலம், துணைத் தலைவர் ராமமூர்த்தி, செயலாளர்கள் சுப்ரமணியன், நம்பிராஜன், பொருளா ளர் வாசுதேவன், பக்தகோலாகலன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.