Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வில்லியனூர் சிவன் கோவிலில் திருமுறை ... சங்கராபுரத்தில் ஐயப்ப சாமிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கதலிநரசிங்க பெருமாள் கோயில் தேர் வெள்ளோட்டமிட திட்டம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜன
2013
11:01

ஆண்டிபட்டி: ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில், புதியதேர் செய்யும் பணியை பிப்ரவரி இறுதிக்குள் முடித்து வெள்ளோட்டமிட திட்டமிடப்பட்டுள்ளதாக, கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.ஜம்புலிபுத்தார் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் புதியதேர் செய்யும் பணி,17 லட்சம் ரூபாய் செலவில் 2005ல் துவங்கியது. மதுரை மீனாட்சி கோயில் மூலம் நிதி ஒதுக்கப்பட்டு நடந்த பணிகளில், தொய்வு ஏற்பட்டதால் சில மாதங்கள் கிடப்பில் போடப்பட்டது. பின் மீண்டும் தேர் செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டது. கடந்த ஆறு மாதங்களாக தேர் செய்யும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. புதிய தேர் 27 அடி உயரம், இரும்பு அச்சுக்கு மேல் ஐந்து அலங்கார அடுக்குகள் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டு வருகிறது. பிரம்மா அடுக்கான முதல் அடுக்கில் கதலிநரசிங்கப்பெருமாள், சிவன், விநாயகர், முருகன், லட்சுமி, சரஸ்வதி தெய்வங்களின் சிற்பங்களும், கோண அடுக்கான 2ம் அடுக்கில் சிற்ப வேலைகளும், 3ம் அடுக்கில் பெருமாளின் அவதாரம், 4ம் அடுக்கில் தேவாசனம் மற்றும் ஆழ்வார் அவதாரம், 5ம் அடுக்கில் உற்சவர் அமரும் சிம்மாசன பீடம் மற்றும் தசாவதார சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தேர் செய்யும் சிற்பி ஆறுமுகம் கூறியதாவது: மர சிற்பம் தொடர்பான பணிகள் முழுமை அடைந்துள்ளன. திருச்சி "பெல் நிறுவனத்தில் இருந்து சக்கரம் இன்னும் வரவில்லை. பணிகளை விரைவில் முடித்து, பிப்ரவரி இறுதிக்குள் தேர் வெள்ளோட்டம் விட கோயில் நிர்வாகம் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது,என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar