பதிவு செய்த நாள்
05
ஏப்
2026
10:04
தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டை பொட்டேப்பள்ளி அருகே கம்பம் பள்ளியில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேய சுவாமி கோவிலில், ‘ராமகோடி’ பஜனை நேற்று நடந்தது.
வீர ஆஞ்சநேய சுவாமி கோவிலில் நேற்று காலை, 8:00 மணிக்கு ஒரு கோடி முறை ராமர் பெயரை உச்சரிக்கும் பக்தி பஜனை துவங்கியது. சீனிவாசப்பூர் கிராமிய இசைக் கலைஞர்கள் கிருஷ்ணப்பா தலைமையிலான பக்தி குழுவினர் பஜனை தொடர்ந்து, ராமநாம பஜனையுடன் ஆடிப் பாடினர். பல்வேறு கிராமங்களை சேர்ந்த ராமபக்தர்கள் பங்கேற்றனர் .தொடர்ந்து சிறப்பு பூஜைகள், பிரசாத விநியோகம் நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தயானந்தா, ரத்னா ரெட்டி, நாராயணசாமி, ரவணப்பா, தீனப்பா, புருஷோத்தம் ஆகியோர் செய்திருந்தனர். இப்பஜனை இன்று காலை, 8:00 மணி வரை தொடர்ந்து நடக்கிறது.