Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரசு ஒத்துழைப்புடன் குன்றத்தில் அதே ... சிங்கம்புணரியில் ராமர் பஜனை மடம் கோவில் கும்பாபிஷேகம் சிங்கம்புணரியில் ராமர் பஜனை மடம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி வடக்கு கிரிவிதி வீரதுர்க்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பழநி வடக்கு கிரிவிதி வீரதுர்க்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

08 டிச
2025
12:12

பழநி; பழநி கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வீரதுர்க்கை கோயில் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.


பழநி வடக்கு கிரி வீதியில்,முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வீரதுர்க்கை கோயில் உள்ளது. இங்கு கடந்த 1999ல் அக்., 29 அன்று கும்பாபிஷேகம் பெற்றது. அதன்பின் இந்த ஆண்டு கும்பாபிஷேக பணிகள் நடைபெற நவ.10 ல பாலாலயம், முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. கும்பாபிஷேக திருப்பணிகள் ரூ 82.65 லட்சத்தில் நடைபெற்றது. நேற்று முன்தினம் (டிச.6.,) காலை 7:00 மணிக்கு இறை அனுமதி பெறுதல் கணபதி பூஜை நடைபெற்றது.மாலை புனித மண் எடுத்தல், முதற்கால வேள்வி பூஜை நடைபெற்றது. நேற்று (டிச.,7) இரண்டாம் கால வேள்வி பூஜை, காலை 7:00 மணிக்கு துவங்கியது. இதில் திருமேனியை தூய்மை செய்தல், பல்பொருள் வேள்வி நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. திருக்குடங்கள் வேள்விச்சாலையில் இருந்து எடுத்துவரப்பட்டு, வடக்கு கிரி வீதியில் உள்ள வீரத் துர்க்கை அம்மன் கோயில், கருவறை விமான கலச கும்பாபிஷேகம் காலை 11:00 மணிக்கு நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை அமிர்தலிங்கம் குருக்கள், செல்வ சுப்பிரமணியம் குருக்கள் குழுவினர் நிகழ்த்தினர். அதனைத் தொடர்ந்து விநாயகர், மூலவர், வீரதுர்க்கை அம்மன், வள்ளி, தெய்வயானை, சுப்ரமணியர்களுக்கு அபிஷேகம் நடைபெற்று அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன், கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து மற்றும் அதிகாரிகள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
கோவை: உக்கடம் பூமி நீளா சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் உற்சவமூர்த்திகளான விநாயகப் பெருமான், ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி அருகே வளையனேந்தல் கிராமத்தில் உள்ள கூம்பாச்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar