Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடலுார் பாரஸ்வநாதர் கோவிலில் ... விக்கிரவாண்டி பெருமாள் கோவிலில் ஆண்டாள் உற்சவர் சிலை பிரதிஷ்டை விக்கிரவாண்டி பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் மாவிளக்கு எடுத்த பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் மாவிளக்கு எடுத்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

15 டிச
2025
10:12

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத, கடை ஞாயிறு விழாவின் கடைசி வாரமான நேற்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்ட நெரிசலில் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில், வாரந்தோறும் பக்தர்கள் மாவிளக்கு பரிகாரம் செய்யும், கடை ஞாயிறு பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கார்த்திகை மாத கடைசி வார கடை ஞாயிறு விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி மூலவருக்கும், உத்சவருக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம் மஹாதீபாராதனை நடந்தது. கார்த்திகை மாதத்தின் கடைசிவாரம் என்பதால், கடந்த வாரங்களைவிட நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதில், சிறுவர்கள், பெரியவர்கள் என, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மண்சட்டியில், பச்சரிசி மாவு, வெல்லம் சேர்த்து, அதில் அகல் விளக்கில் நெய்தீபம் ஏற்றி, தலையில் மாவிளக்குடன், கூட்ட நெரிசலில் பிரகாரத்தை வலம் வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். விழாவையொட்டி கோவில் குளக்கரையில், தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு மீட்பு உபகரணங்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல கூட்ட நெரிசலை தவிர்க்க சிவ காஞ்சி போலீசாரும் கோவிலின் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar