செஞ்சி; செஞ்சி பகுதி கோவில்களில் மார்கழி மாத துவக்கத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
செஞ்சி அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் மார்கழி மாதம் துவக்கத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கரமும், தீபாராதனையும் நடந்தது. பகவதர்கள் திருப்பாவை, திருவம்பாவை ஓதினர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். பீரங்கிமேடு அருணாச்சல ஈஸ்வரர் கோவில் வெங்கடாஜலபதிக்கும், காந்தி பஜார் செல்வ விநாயகருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கரம் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.