சூலூர் பகுதி கோவில்களில் மார்கழி மாத பூஜை துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2025 11:12
சூலூர்; சூலூர் வட்டார கோவில்களில், துவங்கிய மார்கழி பூஜையில், பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
மார்கழி மாதம் நேற்று பிறந்ததை ஒட்டி, சூலூர் வட்டார கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. சூலூர் வைத்திய நாத சுவாமி கோவில், சூலூர் திரு வேங்கட நாத பெருமாள் கோவில், அப்பநாயக்கன்பட்டி சக்தி மாரியம்மன் கோவில், காங்கயம் பாளையம் சென்னியாண்டவர் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் மார்கழி மாத சிறப்பு அபிஷேகம் அதிகாலையில் நடந்தது. பக்தர்கள் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடி, இறைவனை வழிபட்டனர். கள்ளப்பாளையம் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் பக்தர்கள் பஜனை பாடல்களை பாடி வீதிகளில் வலம் வந்தனர். அப்பநாயக்கன்பட்டி பஜனை கோவிலில், பக்தர்கள் பஜனை பாடல்களை பாடி பெருமானை வழிபட்டனர். கிராமங்களில் அரசமரத்தடி விநாயகருக்கு சிறுவர், சிறுமியர் மற்றும் பெண்கள் தண்ணீர் ஊற்றி வழிபட்டனர்.