உலக நன்மை வேண்டி பெண்கள் கையில் தீப விளக்குகளை ஏந்தி ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2025 04:12
சிவகாசி; சிவகாசியில் பட்டாசு, அச்சு உள்ளிட்ட தொழில்கள் மேன்மையடையவும், நல்ல மழை பொழிந்து நாடு நலம் பெற, மக்களிடையே ஒற்றுமை பெருக வேண்டும் உள்ளிட்ட உலக நன்மை வேண்டி, 1008 பெண்கள் கைகளில் தீபம் ஏந்தி ஊர்வலமாகச் சென்று பிரார்த்தனை நடத்தினர். சிவகாசி காளீஸ்வரி நாடார் மகளிர் மன்றம் நாடார் மகாஜன சங்கம் சமுதாய தெருக்கட்டு சங்கங்கள் நாடார் மகளிர் மன்றங்கள் சார்பில் நடந்த ஊர்வலம் பத்ரகாளியம்மன் கோயில் இருந்து ரதவீதி வழியாக வலம் வந்து மாரியம்மன் கோயிலுக்கு சென்றனர். ஊர்வலத்தின் போது தலையில் அம்மன் கரகத்தை சுமந்தபடி, குலவை ஒலியுடன், ஓம் காளி ஜெய் காளி என்ற சரண கோஷத்துடன் கைகளில் விளக்குகளை ஏந்தியபடி நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலம் சென்றனர். அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.