Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலக நன்மை வேண்டி பெண்கள் கையில் தீப ... கள்ளக்குறிச்சி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு கள்ளக்குறிச்சி சிவன் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டல பூஜை விழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டல பூஜை விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

17 டிச
2025
05:12

வால்பாறை: வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டல பூஜை திருவிழா நேற்று காலை  கொடியேற்றத்துடன் துவங்கியது.


வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஐயப்ப சுவாமி கோவிலின், 39ம் ஆண்டு மண்டல பூஜை திருவிழா இன்று காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. காலை, 7:00 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து, உற்சவர் ஐயப்ப சுவாமி கோவிலை மூன்று முறை வலம் வந்து விநாயகர், முருகன், காசிவிஸ்வநாதர் ஆகியோரிடம் ஆசி பெற்றார். காலை, 10:00 மணிக்கு ராஜகுரு சுப்புராஜ் குருசாமி தலைமையில் திருக்கொடியேற்றப்பட்டது. விழாவில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 19ம் தேதி காலை, 10:15  மணிக்கு நடுமலை ஆற்றில் ஆராட்டுவிழா நடக்கிறது. தொடர்ந்து, 108 கலசங்களுடன் பக்தர்கள் புனித தீர்த்தம் கொண்டு வந்து, ஐயப்ப சுவாமிக்கு அபிஷேக பூஜை நடக்கிறது. மாலை, 6:30 மணிக்கு, 1008 தீபம் ஏற்றி, சுவாமிக்கு ஊஞ்சல் சேவை நடக்கிறது. வரும், 20ம் தேதி காலை, 11:00 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழாவும், மாலை, 3:00 மணிக்கு புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து ஐயப்ப பக்தர்கள் பாலக்கொம்பு ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும், 21ம் தேதி காலை, 11:00 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு புஷ்பாஞ்சலி பூஜையும், மாலை, 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட் தேரில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழா ஏற்பாடுகளை, அகிலபாரத ஐயப்ப சேவா சங்க தலைவர் மூர்த்தி,  செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் அழகர்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar