Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குசேலர் தினம்: குருவாயூரில் ... சென்னை அஷ்டலட்சுமி கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி; திருக்கல்யாணம் விமரிசை சென்னை அஷ்டலட்சுமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மஹா தீபம் ஏற்றிய அருணாசலேஸ்வரர் மலைமீது பிராயச்சித்த அபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மஹா தீபம் ஏற்றிய அருணாசலேஸ்வரர் மலைமீது பிராயச்சித்த அபிஷேகம்

பதிவு செய்த நாள்

17 டிச
2025
06:12

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், கார்த்திகை தீபத் திருவிழா முடிந்ததை யொட்டி, அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பிராயச்சித்த  தீர்த்தத்தை  2,668 அடி அண்ணாமலையார் மலை உச்சியில்,  கொப்பரை வைத்து மஹா தீபம் ஏற்றும் இடத்தில் அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடந்தது.


திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள மலையையே, சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். கார்த்திகை தீப திருவிழாவில் கடந்த, 3ம் தேதி 2,668 அடி உயர, மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, தீபம், 11 நாட்கள் எரிந்தது. இந்நிலையில், மலை மேல் ஏறியதற்கு, பிராயச்சித்த பரிகார பூஜை நடந்தது. மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபடுவதால், பக்தர்கள் மலை மேல் ஏறியதற்கு, பிராயசித்த பரிகார பூஜை இன்று நடந்தது. இதையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில், சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, சிறப்பு யாக சாலை பூஜை நடத்தப்பட்டு, அதன் கலச நீரை, அண்ணாமலையார் மலை உச்சிக்கு கொண்டு சென்று, அருணாசலேஸ்வரர் சுவாமி பாதத்தில், பிராயச்சித்த அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு தங்க தேரோட்டம் நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுாரில் கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar