Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாமல்லபுரம் கோவில்களில் மார்கழி ... மார்கழி உத்சவம்: நாளை முதல் விஷ்ணு சஹஸ்ரநாமம் கற்றல் முகாம் மார்கழி உத்சவம்: நாளை முதல் விஷ்ணு ...
முதல் பக்கம் » செய்திகள்
திருக்கோஷ்டியூரில் டிச.20ல் பகல் பத்து துவக்கம்; டிச.30 ல் சொர்க்க வாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
திருக்கோஷ்டியூரில் டிச.20ல் பகல் பத்து துவக்கம்; டிச.30 ல் சொர்க்க வாசல் திறப்பு

பதிவு செய்த நாள்

18 டிச
2025
10:12

திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 21 நாட்கள் நடைபெறும் அத்யயன உத்ஸவத்தில் பகல்பத்து டிச.20ல் துவங்குகிறது. டிச.30 ல் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும்.


சிவகங்கை சமஸ்தானத்திற்குட்பட்ட இக்கோயிலில் அத்யயன உத்ஸவத்தில் பகல் பத்து (பகலில் பெருமாளுக்கு சேவை) மற்றும் ராப்பத்து (இரவில் பெருமாளுக்கு சேவை) நடைபெறும். டிச.20 காலை பெருமாள் ஆண்டாள் சன்னதிக்கு எழுந்தருளுகிறார். தொடர்ந்து யாகசாலை பூஜை நடந்து காப்புக்கட்டி பகல்பத்து உத்ஸவம் துவங்கும். திருமங்கையாழ்வாருக்கு மரியாதை செய்து திருமொழித் திருநாள் நடைபெறும். மாலையில் மண்டகப்படி தீபாராதனை நடந்து மரியாதை வழங்கிய பின் சுவாமி மூலஸ்தானம் எழுந்தருளல் நடைபெறும். பகல் பத்து நிறைவு நாளான டிச.29 மாலையில் நாச்சியார் திருக்கோலத்தில் பெருமாள் மோகினி அவதாரம் எடுத்து அருள்பாலிப்பார். டிச.30ல் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலையில் பெருமாள் திருமாமணி மண்டபத்தில் சயனத்திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சித்தருவார். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்த அலங்காரம் நடைபெறும். மாலையில் ராஜாங்க கோலத்திலும், இரவில் தங்கப் பல்லக்கில் ராஜ அலங்காரத்திலும் பெருமாள் எழுந்தருளி சொர்க்கவாசல் திறக்கப்படும். மறுநாள் முதல் ராப்பத்து உத்ஸவம் துவங்கும். தினசரி மாலையில் தாயார் சன்னதியில் பெருமாள் எழுந்தருளலும், சொர்க்கவாசல் கடந்தருளி ஆழ்வார் பாசுரங்கள் சேவித்து நம்மாழ்வார் திருவடி தொழுதலும் ஜன.8 வரை நடைபெறும்.

 
மேலும் செய்திகள் »
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் இருந்து பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் வீதி பஜனை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பஜனை மடத்தில் மார்கழி வழிபாடு நடக்கிறது. இங்குள்ள ... மேலும்
 
temple news
பந்தலூர்; பந்தலூர் அருகே நெல்லியாலம் சுற்று வட்டார பகுதிகளில், கடும் குளிரிலும் இளைஞர்கள் ராமர் பஜனை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர பந்தலில், சாணக்யா குரு சேனல் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நடந்து வரும் மார்கழி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar