Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ... தமிழகத்திலேயே முதல் முறையாக குண்டம் விழாவுக்கு ரூ.5 லட்சம் இன்சூரன்ஸ்! தமிழகத்திலேயே முதல் முறையாக குண்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தனி மனிதன் அமைதி அடைந்தால் உலகம் அமைதி அடையும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜன
2013
10:01

கோவை: கோவையில், வேதாத்திரி மகரிஷியின் "உலக சமுதாய சேவை மையம் சார்பில் உலக அமைதி தின விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, உலக சமுதாய சேவை மைய தலைவர் பச்சையப்பன் தலைமை வகித்தார் செயலாளர் ஹரிதாஸ் வரவேற்றார். இதில், பங்கேற்ற உலக சமூதாய சேவை மைய இணை இயக்குனர் அறிவானந்தம் பேசியதாவது:உலக அமைதி குறித்து மகரிஷி பல விளக்கங்களை அளித்து இருக்கிறார். நாம் செய்யும் செயல் ஒவ்வொன்றுக்கும் ஒரு விளைவு உண்டு. அவ்விளைவு நம் உடலுக்கும் மனதிற்கும் ஏற்றதாக இருந்தால் அது இன்பமானது. ஏற்றுக்கொள்ள வில்லை என்றால் அது துன்பமானது. இவை இரண்டும் இல்லாத நிலைதான் அமைதி. 1958ல் உலக சமுதாய சேவை மையத்தை மகரிஷி பதிவு செய்த போது. இச்சேவை மையம் எதற்காக என்று பலர் கேட்டனர். அதற்கு அவர் , "" ஓர் உலக ஆட்சி, ஒழுக்கத்தோடு குழந்தைகளை வளர்க்கும் திட்டம், உலகம் முழுவதும் பொருள் துறையில் சமநீதி, சீர்திருத்தம் சிக்கனம் சிறந்த வாழ்வு, தெய்வநிலை இறைவணக்கம், நேர் வழியில் விஞ்ஞானம் பயன் கொள்ளல் என ஏழு திட்டங்களை சொன்னார். இது எப்போது அமுலுக்கு வரும் என்று கேட்ட போது, உடனே வராது ஆனால், 100 ஆண்டுகளுக்கு பிறகு கண்டிப்பாக அமுலுக்கு வரும் என்றார்.உலகம் அமைதி பெற வேண் டும். உலக மக்கள் அனைவரும் இன்பமாக வழவேண்டும் என்பதுதான் வேதாத்திரி மகரிஷியின் கனவாக இருந்தது. அதற்காக அவர் பல பணிகளை செய்தார். இன்றைக்கு பல பேர் உலக அமைதி பற்றி பேசி வருகிறார்கள் ஏன் இன்னும் அமைதி வரவில்லை. காரணம் பேசுபவர்களே அமைதியாக இல்லை.உலகம் அமைதி பெற வேண்டும் என்றால் தனி மனிதன் அமைதி பெற வேண்டும்.அவன் அமைதி அடைந்தால் அவன் குடும்பமும் அமைதி அடையும், அவன் வாழும் ஊர், நாடு அமைதி பெறும். பிறகு இந்த உலகம் அமைதி பெறும். இதுதான் மகரிஷியின் சிந்தனை. உலக அமைதிக்கு எதிராக இருப்பது போர், முதலில் அதை தடுக்க வேண்டும் என்றார். இவை அமுலுக்கு வரவேண்டும் என்றால், அவர் சொன்ன வழிகளையும், பயிற்சி முறைகளையும் பின்பற்ற வேண்டும். அவர் ஒவ்வொன்றையும் பயிற்சி செய்து சோதனை செய்து பார்த்து பலனைஅறிந்த பிறகுதான் மற்றவர்களுக்கு போதித்தார். அதனால்தான் அவர் உருவாக்கிய மன வளக்கலையை அரசு அங்கீகரித்துள்ளது. பல்கலைக் கழகங்கள் பாடமாக ஏற்றுக் கொண்டுள்ளன. உலகம் முழுவதும் பல லட்சம் பேர் மன வளக்கலையை கற்று பயன் பெற்றுள்ளனர்.இவ்வாறு, அறிவானந்தம் பேசினார்.உலக சமுதாய சேவை மைய துணைத்தலைவர் வெள்ளிங்கிரி,கவிஞர் செல்லகணபதி, பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சுசிலா, பொருளாளர் அவினாஷ் வேலுச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கார்த்திகை சோம வாரத்தையொட்டி சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை; ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில், ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், 500 நடன கலைஞர்கள் பரத நாட்டியம், கோலாட்டம் ஆடியவாறு, 14 கி.மீ., துாரம் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை, இளையான்குடி பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சொக்கநாதர் கோயிலில் நெல்லி மர பூஜை நடந்தது. சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar