Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மனதினை ஒருமுகப்படுத்துவதும் ... காஞ்சியில் ஏகாம்பரநாதர் திருக்கல்யாண வைபவம் திருமுறை திருவிழாவில் வெகுவிமரிசை காஞ்சியில் ஏகாம்பரநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாஸ்தா பட்டாபிஷேக விழா; பள்ளிக்கரணையில் விமரிசை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சாஸ்தா பட்டாபிஷேக விழா; பள்ளிக்கரணையில் விமரிசை

பதிவு செய்த நாள்

22 டிச
2025
12:12

பள்ளிக்கரணை: பள்ளிக்கரணையில், 18ம் ஆண்டு மண்டல பூஜை, சாஸ்தா பிரீதி, புவனேஸ்வர சாஸ்தா பட்டாபிஷேக வைபவம் விமரிசையாக நடந்தது.


ஸ்ரீ தர்மசாஸ்த்ரு பக்த ஜன சத்சங்கம், ‘ஆஸ்தீக பந்து’ ஆன்மிக மாத இதழ் இணைந்து, 18ம் ஆண்டு மண்டல பூஜை, ஸ்ரீ சாஸ்தா பிரீதி, ஸ்ரீ புவனேஸ்வர சாஸ்தா பட்டாபிஷேக இரண்டு நாள் வைபவம் ஆகியவற்றை, பள்ளிக்கரணை, நீலாம்பாள் மஹாலில், நேற்று முன்தினம் துவக்கின. கேரள தாந்திரீக முறைப்படி, காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், தொடர்ந்து அய்யப்பனுக்கு அஷ்டாபிஷேகம், உஷத் பூஜை நடந்தது. காலை 9:00 மணிக்கு புவனேஸ்வர சாஸ்தா பட்டாபிஷேக வைபவம் நடந்தது. மாலை, சாஸ்தா பிறப்பு வில்லிசை கச்சேரியும், தொடர்ந்து படி பூஜை, புஷ்பாபிஷேகம், அர்த்தஜாம பூஜை, பிரசாத வினியோகம் நடந்தது. நேற்று காலை, அஷ்ட திரவிய கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. ருத்ரம் கிராமார்ச்சனையுடன் அஷ்டாபிஷேகம் நடந்தது. காலை 9:00 மணிக்கு களப ஸ்தாபனம், களபாபிஷேகம், அருண பிரச்சனம் பாராயணம், மகா தீபாராதனை நடந்தது. சதுர்வேத பாராயணம், உச்ச பூஜையும் காலை 11:30 மணிக்கு அரவிந்த் சுப்பிரமணியம், விபாவன் மற்றும் குழுவினர் சாஸ்தா வரவு பாட்டு, சுவாமி வரவு நடந்தது. இந்த வைபவத்திற்கான ஏற்பாடுகளை, தர்மசாஸ்த்ரு பக்த ஜன சத்சங்கத்தின் ராமநாதன், ஆஸ்திக பந்து, வைதீகம் அய்யர் நிறுவனர் கணேச சாஸ்திரிகள் ஆகியோர் தலைமையில் விழா குழுவினர் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கார்த்திகை தீப விழாவை ஒட்டி, நேற்று மலைக்கோவில் கொடிமரம் அருகே ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவில் நேற்று மாலை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக, 500 கிலோ பூக்களால் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத் திருவிழா பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க சுப்பிரமணியருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar