பதிவு செய்த நாள்
03
ஜன
2013
05:01
ஆண்டுதோறும் சுவாமிஜியின் பிறந்த நாளான ஜனவரி 12-ஐ தேசிய இளைஞர் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம். அமெரிக்காவின் சிகாகோ நகரில் "சகோதர சகோதரிகளே என முழங்கி, இந்தியாவையும் இந்து மதத்தையும் உலகே திரும்பிப் பார்க்கச் செய்த வீரத்துறவி விவேகானந்தரின் நூற்றி ஐம்பதாவது ஆண்டு விழா வரும் 12ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. 39 ஆண்டுகளே இந்த மண்ணில் இருந்தவர், ஆனால் ஒரு நூற்றாண்டைக் கடந்தும் மக்கள் மனதில் இருப்பவர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைசிறந்த சமயத்தலைவர்களுள் ஒருவராக திகழ்ந்தவர். ரிஷிகளிடமும், முனிவர்களிடமும் இருந்த ஆன்மிகத்தை சாமான்ய மக்களிடம் கொண்டு சேர்த்தவர். சுவாமி ராமகிருஷ்ணரின் தலைசிறந்த சீடர். எழுச்சியுற வேண்டும் என நினைக்கும் இன்றைய இளைய தலைமுறையினர் இவரது கருத்துக்களை இப்போது படித்தால் கூட போதும், வீறு கொண்டு எழுவது திண்ணம்.
இத்தகைய வீரத்துறவிக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், அவருடைய துணிச்சலான கருத்துக்களை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு செல்லும் வகையிலும், தினமலர் இணையதளத்தில், அவரைப் பற்றிய அரிய குறிப்புகள், அவருடைய உரைகள், கதைகள், படங்கள் மற்றும் பல விஷயங்களை வெளியிட்டுள்ளது. வாசகர்கள் அனைவரும் இதைப் பார்த்து, படித்து பயன் பெற வேண்டும். அவரைப் போல் துணிச்சலும் நேர்மை உள்ளவராகவும் வாழ வேண்டும்.
விவேகானந்தர் பற்றிய அனைத்து தகவல்களுக்கு கிளிக் செய்யவும்.