Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலைக்கு தங்க அங்கி பவனி ... சபரிமலையில் கற்பூர ஆழி பவனி திரளான பக்தர்கள் பங்கேற்பு சபரிமலையில் கற்பூர ஆழி பவனி திரளான ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலைக்கு கர்நாடக பக்தர்கள் பாத யாத்திரை: வன ஊழியர் பாதுகாப்புடன் கடந்து வந்தனர்
எழுத்தின் அளவு:
சபரிமலைக்கு கர்நாடக பக்தர்கள் பாத யாத்திரை: வன ஊழியர் பாதுகாப்புடன் கடந்து வந்தனர்

பதிவு செய்த நாள்

24 டிச
2025
01:12

கூடலூர்; சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பாதயாத்திரை மேற்கொண்ட கர்நாடகாவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள், முதுமலை சாலையை வன ஊழியர்கள் பாதுகாப்புடன் கடந்து வந்தனர்.


கேரளா சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்களும் வந்து செல்கின்றனர். கர்நாடகவை சேர்ந்த பல ஐயப்ப பக்தர்கள் நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக பாத யாத்திரையாக சபரிமலைக்கு சென்று வருவது வழக்கம். அதன்படி, நடப்பு ஆண்டு, பாதயாத்திரையாக ஐயப்பன் கோவிலுக்கு செல்ல துவங்கி உள்ளனர். மைசூரு பாலியா பகுதியைச் சேர்ந்த 25 ஐயப்பன் பக்தர்கள் குருசாமி பிரசந்தா தலைமையில் 18ம் தேதி, மைசூரில் இருந்து பாத யாத்திரையை துவங்கினர். இவர்கள் நேற்று முன்தினம், மதியம் 1:00 மணிக்கு தமிழக . கர்நாடக எல்லையான கக்கனல்லாவை கடந்து, முதுமலை புலிகள் காப்பகம் வழியாக செல்லும் மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் கூடலூர் நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டனர். வன ஊழியர்கள் அவர்களுக்கு பாதுகாப்பாக உடன் வந்தனர். இவர்கள், மாலை தொரப்பள்ளி வந்து, இரவு அங்குள்ள ராமர் கோவிலில் தங்கினர். அங்கிருந்து, நேற்று, காலை பாத யாத்திரையை துவங்கிய ஐயப்ப பக்தர்கள் கூடலூர் கடந்து கேரளா சென்றனர்.


ஐயப்ப பக்தர்கள் பிரசன்னா, ரேவன்குமார் கூறுகையில், நாங்கள் மைசூரிலிருந்து 18ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பாத யாத்திரையை துவங்கி மேற்கொண்டு வருகிறோம். பந்திப்பூர் மற்றும் முதுமலை வனப் பகுதி சாலையை கடந்து செல்ல வன ஊழியர்கள் எங்களுக்கு உதவினார்கள். தினமும் 35 முதல் 50 பாதயாத்திரை செல்கிறோம். இரவில், கோவில்களில் தங்கி, பகல் நேரத்தில் பாத யாத்திரையை தொடர்கிறோம் என்றனர். வனத்துறையினர் கூறுகையில், முதுமலை வனப்பகுதியில் சாலையோரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால், பாத யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்கள், வனத்துறைக்கு முறையாக தகவல் தெரிவித்து, பாதுகாப்புடன், கடந்து செல்ல வேண்டும். பாதுகாப்பின்றி வனப்பகுதியில் நடந்து செல்வது தவிர்க்க வேண்டும் என்றனர்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar