அன்னூர், சத்தி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயத்தில், நாளை அதிகாலை 4:30 மணிக்கு சிறப்பு ஆராதனை நடைபெறுகிறது. ஆயர் சாந்தகுமார் சிறப்பு செய்தி அளிக்கிறார்.
இதையடுத்து காலை 9:00 மணிக்கு இரண்டாவது ஆராதனை நடைபெறுகிறது. ஆராதனையில் பங்கேற்கும் அனைவருக்கும் கேக் மற்றும் தேநீர் வழங்கப்படுகிறது. இதே போல் எல்லப்பாளையம், கெம்பநாயக்கன்பாளையம், தெலுங்குபாளையம், பொன்னே கவுண்டன் புதூர், பொகலூர் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ., ஆலயங்களில் நாளை கிறிஸ்மஸ் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது. அன்னூர், சத்தி ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ., ஆலயம், பொன்னே கவுண்டன் புதூர், கெம்பநாயக்கன்பாளையம், எல்லப்பாளையம், தெலுங்குபாளையம் பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் அலங்கார விளக்குகளால் மின் ஒளியில் ஜொலித்தன.