Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! வென்னிமலை கோயிலில் சங்கடஹர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோபி கோவில்களில் குண்டம் திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2013
11:01

கோபிசெட்டிபாளையம்: கோபி சுற்று வட்டாரத்தில் மூன்று கோவில்களில் நேற்று நடந்த குண்டம் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர். கோபி அருகே அளுக்குளியில் பிரசித்தி பெற்ற செல்லியாண்டி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் குண்டம் விழா, 2012, டிசம்பர், 21 தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 28 தேதி நந்தா தீபம், ஜனவரி, 1ம் தேதி மஞ்சள் காப்பு, கிராம சாந்தி, 2ம்தேதி கொடியேற்றம், நேற்று முன்தினம் அரண்மனை பொங்கல் விழா, குண்டம் திறப்பு, அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 6 மணிக்கு குண்டம் இறங்குதல் நடந்தது. அளுக்குளி, கோவை பிரிவு உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பக்தர்கள் குண்டத்தில் இறங்கினர். இன்று காலை, 6 மணிக்கு சந்தனகாப்பு அலங்காரம், மாலை நான்கு மணி முதல் ஆறு மணி வரை தேர் வடம் பிடித்தலும், நாளை காலை, 6 மணிக்கு மஞ்சள் காப்பு அலங்காரம், மாலை, 6 மணிக்கு ரததோற்சவம் மற்றும் தெப்போற்சவம், 6ம் தேதி மஞ்சள் நீராட்டு, மாலை, 6 மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.

*குருமந்தூர் பூங்குழலி அம்மன் கோவில் குண்டம் திருவிழா டிசம்பர், 20ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. டிசம்பர், 31ம் தேதி சந்தனகாப்பு அலங்காரம், ஜனவரி, 1ம் தேதி தீர்த்தகுடம் எடுத்தலும், நேற்று முன்தினம் பச்சை பழம் பூஜை, மாலை, 7 மணிக்கு குண்டம் திறப்பு நடந்தது. நேற்று அதிகாலை, 5 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. குருமந்தூர், மூணாம்பள்ளி, நடுப்பாளையம், ஆயிபாளையம் உள்பட பல பகுதியை சேர்ந்த பக்தர்கள் குண்டம் இறங்கினர். அக்னி அபிஷேகம், அம்மன் திருவீதி உலா, 10ம் தேதி காலை, 9 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவம் மற்றும் மறுபூஜை நடக்கிறது.
*கொளப்பலூர் பச்சைநாயகி அம்மன் கோவிலில் நேற்று குண்டம் திருவிழாவில், கொளப்பலூர் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குண்டத்தில் இறங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar