கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று மாலை மோகினி அவதாரத்தில் பெருமாள் உற்சவம் நடந்தது.
கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவம் நடந்தது. தினமும் காலை பன்னிரு ஆழ்வார்களுக்கு சிறப்பு தீபாராதனை நடந்து, நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் வாசிக்கப்பட்டன.
பகல் பத்து நிறைவு நாளான நேற்று மாலை பெருமாள் கையில் வீணை ஏந்தி மோகினி அவதாரத்தில் கோவில் உட்பிரகாரம் உலா வந்தார். தொடர்ந்து இன்று அதிகாலை 4:30 மணிக்கு பெருமாள் சர்வ அலங்காரத்துடன் சொர்க்கவாசல் வழியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.