உளுந்துார்பேட்டை ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோவிலில் துவாதசி பாரணை பிரசாதம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31டிச 2025 03:12
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. உளுந்துார்பேட்டை ஸ்ரீ கனகவள்ளி தாயார் சமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு வழிபாடு நடந்தது. துவாதசி பாரணை பிரசாதம் வழங்கப்பட்டது. அதனையொட்டி நேற்று இரவு முதல் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள், தீபாராதனை வழிபாடு நடந்தது. பின்னர் ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளி தாளாளர் யத்தீஸ்வரி ஆத்ம விகாச ப்ரியா அம்பா தலைமை தாங்கி அன்னதானத்தை துவக்கி வைத்தார். மூத்த வழக்கறிஞர் அன்பழகன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சிவராஜ் மற்றும் ஆண்டாள் சேவை குழுவினர் செய்திருந்தனர்.