வடமதுரை; தென்னம்பட்டி சவடம்மன் மலைக்கோயிலில் 2026 புத்தாண்டை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது. கோயில் வளாகத்தில் நடந்த யாக சாலை பூஜைகளை தொடர்ந்து பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தங்கள் கொண்டு அபிஷேகம் நடந்தது. பின்னர் புஷ்ப, சொர்ண அலங்காரத்தில் மகா அபிஷேகம் நடந்தது. நந்தீஸ்வரர் கோயில் மந்தையில் இருக்கும் செல்வவிநாயகர், பாலமுருகன், நந்தீஸ்வரன், மதவானையம்மன், ஆலம்மன் கோயில்களிலும் அபிஷேக ஆராதனை நடந்தது. அதே பகுதியில் ஒட்டி வளர்ந்திருந்த அரசு, வேம்பு மரங்களுக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஏற்பாட்டினை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.