ஆங்கில புத்தாண்டு, பிரதோஷம்: பெரியகுளம் கோயில்களில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜன 2026 04:01
பொரியகுளம்; பெரியகுளம் பகுதியில் ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பிரதோஷம் பூஜை கோலாகலமாக நடந்தது.
பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில்,வரதராஜப் பெருமாள் கோவில், காளஹஸ்தீஸ்வரர் கோயில், ஷீரடி சாய்பாபா கோயில், கவுமாரியம்மன் கோயில், சங்க விநாயகர் கோயில், நாமத்வார் பிரார்த்தனை மையம், கைலாசபட்டி கைலாசநாதர் கோயில்,தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் உட்பட தாலுகா பகுதிகளில் பல்வேறு கோயில்களில் ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. ஜன.முதல் நாளில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவாலயங்களில் நந்தீஸ்வரர், சிவனுக்கு பிரதோஷம் பூஜை கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.