விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் ஆருத்ரா தரிசன பெருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜன 2026 10:01
திருவாரூர்: திருவாரூர் அருகே விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோவிலில் ஆருத்ரா தரிசன பெருவிழாவில் இன்று பதஞ்சலி வியாக்கிரபாத முனிவர்களுக்கு, தியாகேச பெருமான் பாததரிசனம் காட்சி அருளுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தில்லை நடராஜபெருமான் ஆனந்த திரு நடனத்தைக் கண்ட பதஞ்சலி வியாக்கிரபாத மகரிஷிகள் சிவபாதம் காண, ஆருர் வந்து மார்கழித்திங்கள் திருவிளமலில் அஜபாவன நர்த்தனமாடி சிவபெருமான் (நடராஜர்) பதஞ்சலி-வியாக்கிரபா மகரிஷிகளுக்கு ரத்ரபாதம் காட்டி விளமலில் அருளியதும், திருவாரூரில் தியாகேசப்பெருமான் பதஞ்சலி வியாக்கிரபாத முனிவர்களுக்கு திருவடிக்காட்டி அருளியது ஆருத்ரா தரிசனம் என உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாத திருவாதிரை நாளன்று பிறவியில் இந்த திருப்பாத தரிசனத்தை காண்பவர்கள் சாப, பாவ விமோசனம்பெற்று முக்தி பெறுவார்கள் என்பது ஐதீகம். இதனை முன்னிட்டு நடராஜ பெருமானுக்கு 32 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சந்தணம் சாத்தப்பட்டு, மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.