பரமக்குடி: பரமக்குடி அருகே உலகநாதபுரம் அற்புத குழந்தை இயேசு சர்ச்சில் பத்தாம் ஆண்டு விழா கொடியேற்றம் நடந்தது.
ராமநாதபுரம் மறை மாவட்ட அதிபர் சிங்கராயர் தலைமை வகித்து சர்ச்சில் குழந்தை இயேசு கொடியை ஏற்றினார். சாத்தரசன்பட்டி அருட்பணியாளர் பிரான்சிஸ் தைரியராயன் முன்னிலை வகித்தார்.
ஜன., 10 மாலை சிறப்பு திருப்பலி நிறைவடைந்து தேர் பவனி நடக்க உள்ளது. பெருவிழா திருப்பலி ஜன.,11ல் நடக்கிறது.
அருட்பணியாளர் சுவாக்கின் ஞானதாசன், இருதய அருள் சகோதரர்கள், பங்கு அருட்பணி பேரவை நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.