2 நாள் பயணமாக நேற்று (ஜனவரி 04) தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, புதுக்கோட்டையில் நடந்த தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் யாத்திரையின் நிறைவு விழாவில் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து, கட்சி நிர்வாகிகளுடன் சட்டசபை தேர்தல் மற்றும் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தினார். 2ம் நாளான இன்று, திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோவில் மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் அமித்ஷா சுவாமி தரிசனம் செய்தார். மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன் ராம் மேக்வால், முரளிதர் மோஹோல், இணை அமைச்சர் முருகன் ஆகியோரும் உடனிருந்தனர். கோவிலுக்கு சென்ற போது, அங்கு திரண்டிருந்த மக்களுடன் அவர் கை குலுக்கினார். மத்திய அமைச்சர்களின் வருகையையொட்டி, திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தொடர்ந்து, மன்னார்புரத்தில் உள்ள ராணுவ மைதானத்தில் நடக்கும் மோடி பொங்கல் விழாவில் அமித்ஷா பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 2,000 பேர் கலந்து கொள்ள உள்ளனர். அதன்பிறகு, திருச்சி விமான நிலையம் சென்று, அங்கிருந்து அவர் டில்லி புறப்பட்டு செல்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் வருகையையொட்டி, விமான